2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

இடிந்து வீழ்ந்த கட்டட மாதிரிகள் பரிசோதனை செய்யப்படவுள்ளன

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி – பூவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அவற்றின் தரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்  தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் கொங்கிறீட் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

பரிசோதனை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் சில தினங்களில் மத்திய மாகாண ஆளுநருக்கும் மாவட்ட செயலாளருக்கும் வழங்கப்படவுள்ளது.

குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போது, உரிய நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்ட அனுமதியை மீறியே கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமையினால் அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .