2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

இந்திய கடற்படை நிகழ்வில் இலங்கைத் தளபதியால் சர்ச்சை

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியக் கடற்படை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன சிறப்பு அதிதியாகப் பங்கேற்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று, இந்தியச் செய்தி தெரிவிக்கிறது.   

கேரள மாநிலம் எழிமலவில் உள்ள இந்திய கடற்படை அக்கடமியில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்விலேயே இலங்கை கடற்படை தளபதி, சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.   

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு, வெளிநாட்டு படை அதிகாரிகள் இதுவரை அனுமதிக்கப்பட்டதில்லை.   

காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் இந்த மரபை மீறும் வகையில் எழிமல நிகழ்வில் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.  

இந்திய வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கான சின்னங்களையும் சூட்டினார்.  

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சக்கட்டமான `முள்ளிவாய்க்கால் பேரவலம்’ தொடர்பான நிகழ்வுகள் அனுசரிக்கப்பட்டுவரும் வேளையில் மத்திய அரசாங்கத்தின் செயல் பல்வேறு தரப்பினரிடமும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .