2025 ஜூலை 19, சனிக்கிழமை

இலங்கையில் பரவிவரும் கொரோனா சக்திவாய்ந்தது´B.1.42´

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது பரவிவரும்  கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற பிரிவுக்குட்பட்ட மிக சக்திவாய்ந்த வைரஸ் என, ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

இப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில், சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 பிரிவுகளுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர்

தெரிவித்துள்ளார்.இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு என்று வந்தது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது

இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X