Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபையின் நடவடிக்கைகள், ஒழுங்குப் புத்தகங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை துரிதமாக பெற்றுக்கொள்ளும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐபேட் (Ipad) பெற்றுக்கொடுப்பதற்கான திட்டமொன்று இருக்கிறதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
தேவையான சகல ஆவணங்கள் மற்றும் தகவல்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், நிதி வீண்விரயத்தை தவிர்க்கும் வகையிலேயே இவ்வாறான திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது என்றார்.
நிதி மட்டுமன்றி, வீணாக செலவழிக்கப்படும் நேரம், சபைக்குள் எம்.பிக்களின் மேசைகளின் மீது பெரும் தொகையில், ஆவணங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றமை எல்லாமே இல்லாமற் செய்யப்படுமெனத் தெரிவித்த அவர், மேசைகளில் இருக்கும் ஆவணங்களால் உறுப்பினர்களுக்கு கடும் நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது என்றார்.
Ipad பெற்றுக்கொடுப்பதன் ஊடாக, மின்னஞ்சல் மற்றும் ஏனைய மென்பொருள்களின் ஊடாக, மிகவும் இலகுவான முறையில் அவர்களுக்கு வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago