2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஐஃபா இந்திய திரைப்பட விழா; கொழும்பில் போக்குவரத்து நடைமுறைகளில் மாற்றம்

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை முன்னிட்டு, கொழும்பின் பல பகுதிகளிலும் விசேட போக்குவரத்து நடைமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
 
சுகாதாச உள்ளக அரங்கு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் கொள்ளுப்பிட்டி சினமன் கிரான்ட் ஹோட்டல் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையிலேயே இந்த போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

இருப்பினும் இந்த போக்குவரத்து நடைமுறையின் போது வீதிகள் எவையும் மூடப்படமாட்டாது என்று கூறிய அவர், எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் எவ்வித அசெளகரியங்களுக்கும் முகங்கொடுக்கமாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--