2020 ஜூன் 06, சனிக்கிழமை

’ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொள்ள போவதில்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொள்ள போவதில்லை என, கடுவெல நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச்.புத்ததாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜீ.எச். புத்ததாச,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (21) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதனையடுத்து, அடுத்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும் வாக்குறுதியளித்தாக தகவல் வெளியானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X