2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

ஐ.நா.வின் பொதுச்செயலாளரை சந்தித்த சந்திரிக்கா

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும்,தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அட்டோனியோ குட்டரஸை சந்தித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்போது  நல்லிணக்க செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக அரசினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பணிகள் உள்ளிட்டவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் ஐ.நாவின் பொதுச்செயலாளருக்கு தெளிவுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .