Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
R.Maheshwary / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலையின் நிலைமையைப் பார்வையிட சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலரை, சிறைக்குள் செல்லவிடாமல் பாதுகாப்பு பிரிவினர் தடுத்துள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சென்ற போதிலும் அவர்கள் சிறைச்சாலை வளாகத்துக்குள் மாத்திரமே அனுமதிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், அரச பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால், தமக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்தும் சிறைச்சாலைக்குள் சென்று பார்வையிட அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ, நளின் பண்டார, முஜிபுர் ரஹ்மான், திலிப் வெதஆராச்சி, ஜே.சி அலவத்துவல, ரோஹின் கவிரத்ன, ஹெக்டர் ஹப்புஆமி உள்ளிட்டவர்கள் சிறைக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago