2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

‘ஒழுங்குமுறைகளை இலங்கை வழங்கவில்லை’

Gavitha   / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை, இலங்கை இதுவரை வழங்கவில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி, இந்தியப் பிரஜைகளுக்கு தற்போது போடப்பட்டு வரும் நிலையில், தனது தனது அயல் நட்பு நாடுகளுக்கான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை, இந்தியா நேற்று (19) ஆரம்பித்திருந்தது.

முதலாவது தடுப்பூசித் தொகுதி, பூட்டான், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, இந்திய மத்திய அரசாங்கம்  தெரிவித்திருந்தது.

கொரோனா ரைவஸ் தடுப்பூசியை, இலங்கைக்கு அனுப்புவதற்குத் தேவையான அனுமதியை, இலங்கையிடம் இருந்து எதிர்பார்த்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார், ஷீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்திய அரசினால் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .