Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கிழக்கு கடல் எல்லையில் தீப்பிடித்துக்கொண்ட எம்.டி. நிவ் டயமன்ட் கப்பலிலிருந்து கடலுக்குள் கசிந்துள்ள மசகு எண்ணெயின் அடர்த்தியை குறைப்பதற்கு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
“கப்பலுக்கு அருகிலிருந்து இரண்டு கடல் மைல் தொலைவு வரையிலும் எண்ணெய் படிமங்கள் படிந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது” என கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.
குறித்த எண்ணெய் படிமங்களின் அடர்த்தியை குறைப்பதற்கான திரவம் விமான படையின் ஒத்துழைப்புடன் விசுறப்படுவதாகவும் எண்ணெய் படிமத்தை ஊடறுத்து, படகுகளைச் செலுத்தியும் அத்திரவம் வீசப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“எவ்வாறாயினும், எண்ணெய் படிவம் தொடர்ந்தும் கடலில் உள்ளதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எம்.டி. நிவ் டயமன்ட் கப்பல், செப்டெம்பர் 3ஆம் தீப்பிடித்துக்கொண்டது. அத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, 340 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளதென சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் செப்டெம்பர் 28ஆம் திகதியன்று ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
1 hours ago