Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் (ரெலோ) கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் இன்று (08) புதுக்குடியிருப்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு கட்சி தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளர்.
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்,
தேர்தல் முடிவுகளை பார்க்கின்ற பொழுது தமிழ்தேசியத்துக்கு ஆரவாகத்தான் மக்கள் வாக்கினையளித்துள்ளனர் என்பதுடன்,
தேர்தல் கால சலுகைகளுக்காக நிவாரணங்களுக்காக மக்கள் தேசிய கட்சியில் போட்டியிட்ட ஏனைய இனத்தவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
இது தவறான நிலைப்பாடென தெரிவித்துள்ள அவர், மக்கள் தேசியத்தின் மீது அக்கறை கொண்டு செயற்படுகின்ற அதேவேளையில் இது போன்ற தேர்தல்கால ஏமாற்று நடவடிக்கைக்கோ அல்லது சலுகைகளுக்கோ அகப்பட்டு தமிழ் இனத்தினை விற்று மானத்தினை விற்று செயல்படுவதை நாங்கள் அனுமதிக்ககூடாது என்றார்.
தேர்தல் முடிவுகள் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியை தந்துள்தெனவும், எதிர்காலத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் இதுவிடையமாக விழிப்பாக செயற்படாவிட்டால் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
17 minute ago
21 minute ago
49 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
49 minute ago
56 minute ago