2020 மார்ச் 30, திங்கட்கிழமை

கடலுணவுகளைக் கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை, கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினூடாகக் கொள்வனவு செய்வதற்கான அனுமதியை, அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில், நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருவதைக் கருத்திற்கொண்டு, இது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில், இன்று(25) தாக்கல் செய்தார்.

குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில், உள்ளூரில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளைக் கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் அதை கொள்வனவு செய்ய 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான இன்றைய, அமைச்சரவை சந்திப்பில், கொரோனா தொற்றை ஒழிப்பதுத் தொடர்பிலேயே அதிகக் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .