Editorial / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை பத்ரமுல்ல சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.
வட மாகாணத்தின் வன்னி மாவட்டத்தின் சென். அந்தனிஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநித்துவப்படுத்தியே விண்ணப்பத்தை சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.
அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களைக் கையளித்ததாக சீலரத்ன தேரர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையானது இவ்வாண்டு மே 20ஆம் திகதியிலிருந்தான அடுத்த இரண்டாண்டுகளுக்கான புதிய சபையை தெரிவுசெய்யவுள்ளது.
விளையாட்டமைச்சில் இவ்வாண்டு மே மாதம் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் நடைபெறவுள்ளது.
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago