2026 மே 16, சனிக்கிழமை

தண்டவாளத்தில் ஆணி கழற்றியவர் கைது

Editorial   / 2026 மே 16 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன வாசலாவிற்கு அருகில் இடம்பெற்ற ரயில் தடம் புரண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வே சுவிட்ச் பாயிண்ட் (ரயில் பாதை மாற்றி) ஒன்றிலிருந்து உலோகக் கூறுகள் அகற்றப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில்வே திணைக்களத்தின் கூற்றுப்படி, ரயில்களை பாதைகளுக்கு இடையே வழிநடத்தப் பயன்படுத்தப்படும் சுவிட்ச் பாயிண்ட்டில் உள்ள உலோகத் தகடுகள், நாசவேலை அல்லது திருட்டு காரணமாக அகற்றப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தத் தகடுகள் அகற்றப்பட்டதால் சுவிட்ச் பாயிண்ட் ஸ்திரத்தன்மையை இழந்ததாகவும், இதன் காரணமாக ரயிலின் முன்பகுதி பிரதான ரயில் பாதையில் செல்ல, பின் பகுதி பெட்டிகள் திடக் கழிவுத் தளத்திற்குச் செல்லும் தனிப் பாதைக்குத் திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக, ஒரு பெட்டி இரண்டு ரயில் பாதைகளிலும் குறுக்காக கவிழ்ந்தது. இது குறித்து பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளதுடன், தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக சிறப்பு பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அகற்றப்பட்ட ரயில் பாகங்களை அவர் வேறு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்கின்றன. இதற்கிடையில், இந்த தடம் புரண்ட சம்பவத்தில் 12 பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .