2026 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை

‘குடும்ப ஆட்சிக்கு இடமளியோம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்குள், குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்ட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லையென, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,  20 வருடங்களின் பின்னர் வெற்றிப்பெறும் தலைவர் எம்மிடம் இருப்பதாக பிரமதரிடம் நாம்  எடுத்துரைத்தோம். அவ்வாறு எடுத்துரைத்தப் பின்னரே, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக களமிறக்க இணக்கம் தெரிவித்தார்.

தற்போது ஒரே குடும்பத்தினரே அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றனர். இது வெட்கக்கேடானச் செயல். தவறுதலாக ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சிக்கு வந்தால் மஹிந்த பிரதமர், சமல் சபாநாயகர், பசில் நிதியமைச்சர் இவ்வாறே பதவிநிலைகளை அமைத்துக்கொள்வர் எனத் தெரிவித்த அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல,  தங்களது குடும்பத்தை பாதுகாக்க அவர்கள் முனைகின்றனர் எனவும், குடும்ப ஆதிக்கத்தை மீண்டும் அரசியலில் நிலைநிறுத்த போராடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X