Editorial / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள விசேட தேவை உடைய மாணவர்களும், விக்டரி விசேட தேவை உடைய மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நிலையத்தில் சேர்ந்து கொள்ள முடியும் என, அந்த நிலையத்தின் இணைப்பாளர் நித்தியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கொழும்பு - 13, புளுமென்டல் வீதியிலுள்ள இப்பாடசாலையில், விசேட தேவை உடைய மாணவர்களை ஒன்றாக இணைத்து, கல்வி கற்பிப்பதுடன், அவர்கள் தமது தேவையை தாமே நிறைவு செய்யவும் பழக்கி விடப்படுகிறது.
“அத்தகைய மாணவர்களிடையே ஒரு தோழமையை வளர்த்து, சமூகத்தில் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் குழந்தைகளின் தனித்துவத்தைக் கண்டறிந்து அவர்களின் திறமைக்கு ஏற்ப இந்த நிறுவனம் வழி நடத்துகிறது.
“ஒவ்வொரு குழந்தையையும் மதிப்பீடு செய்து, அவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. கற்றல் திறன் குறைந்தவர்களுக்கு முறையான பாடத் திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
“மேலும், அன்றாடத் தேவைகளைப் பழகிக் கொள்வதற்கு பயிற்சியளிக்கப்படுகிறது. செம்மையான பழக்க வழக்கங்கள், அத்துடன் தொழில்சார் விடயங்கள், இயன்மருத்துவ சிகிச்சைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
“இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு, 011-2338218 / 077-3795991 ஆகிய இலக்கங்களுடனோ அல்லது victoryspecialschool@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்பு கொள்ள முடியும்” என்றார்.
நாட்டின் அனைத்து இன மத மொழி மாணவர்களும் இப் பாடசாலையில் அனுமதி பெற முடியுமென அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .