2026 மார்ச் 04, புதன்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 04 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, கோல் மக்கொஞ்சி (2), றஷின் றவீந்திர (2), ஜேம்ஸ் நீஷம், லொக்கி பெர்கியூசன், மற் ஹென்றியிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் மார்கோ ஜன்சனின் ஆட்டமிழக்காத 55 (30), டெவால்ட் பிறெவிஸின் 34 (27), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 29 (24) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, பின் அலென்னின் ஆட்டமிழக்காத 100 (33), டிம் செய்ஃபேர்ட்டின் 58 (33) ஓட்டங்களோடு 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக அலென் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .