Editorial / 2018 மார்ச் 29 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - காரைநகர் 'கெசூரினா' கடற்கரையில் நடைபெறும் சமூக விரோத செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் சீசீடிவி (CCTV)) கமராக்களைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடம் மற்றும் குளியலறை ஆகியன இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
மேலும் மதுபாவனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் குறித்த கடற்கரையை அண்மித்து இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் பாதுகாப்பிற்கென அதிகாரிகள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் நாட்களில் அவர்களால் 100 வீதம் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமற் போவதாக தெரியவந்துள்ளது.
இந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு 'கெசூரினா' கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் சீசீடிவி (CCTV)) கமராக்களைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago