Janu / 2026 மார்ச் 01 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் சனிக்கிழமை (28) இரவு விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சனிக்கிழமை (28) அன்று இரவு 07.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-652 மூலம் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரது பயணப் பையை சோதனையிட்ட போது 36,000 வெளிநாட்டுத் தயாரிப்பு "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் அடங்கிய 180 அட்டைப்பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக புதன்கிழமை (04) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
டீ.கே.ஜி. கபில

4 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago