Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 நவம்பர் 24 , மு.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மதங்கள், கழுத்தறுப்பதற்கு கற்பிக்கவில்லை. பாகிஸ்தான் மதரஸாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரபி மற்றும் மதரஸாக்கள், பிரிவினைவாதிகளை உருவாக்கியமையாக, சாட்சிகள் அளிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, சஹ்ரான் பயங்கரவாதியை உருவாக்கிய, கருவறையை அழிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியைக் கோரி, சுமந்திரன் எம்.பி, யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார். கொழும்பு, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்துச் சென்றவர்களின் வாதத்தால், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான அனுமதி கிடைக்கவில்லை” என்றார்.
“முன்னைய அரசாங்கமாக இருந்திருந்தால், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து ஒரு நாயேனும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருக்காது எனத் தெரிவித்த விமல் வீரவங்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் ஏற்பட்டிருந்த தேசிய பாதுகாப்புக்கான வெற்றிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.
வரவு-செலவுத் திட்டம் மீதான நேற்றைய குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளை நினைவு கூர்வதற்கு அனுமதிக்கமுடியாது. பிரிவினைவாதத்தை உருவாக்க முயற்சித்த சஹ்ரான் பயங்கரவாதியை உருவாக்கிய கருவறையை அழிக்கவேண்டும் என ஆவேசமாகத் தெரிவித்த அவர், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினருக்கும் ஹிந்து கோவில்களுக்கும் தொடர்பில்லை என்றார்.
சஹ்ரானின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் பிரகாரம், சஹ்ரான் பயங்கரவாதி உருவாக்கப்பட்டுள்ளார். அந்தக் கருவறைகளை அழிக்கவேண்டும். உருவாக்கியவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான், கோவில்கள், தேவலாயங்கள் மற்றும் விஹாரைகளுக்கு அச்சமின்றி போகமுடியும் என்றார்.
விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லையேல் அது சிங்கள, தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கும் பெரும் பிரச்சினையாகும் என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago