Editorial / 2017 செப்டெம்பர் 10 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்களில் ஒருவரான நந்தசிறி பக்னரத்ண சிறிசேனவை, நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பொலன்னறுவை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொலன்னறுவை, அதுமல்பிட்டியவில், கப் ரக வாகனமொன்றும் மோட்டார் சைக்களிளொன்றும் மோதிக்கொண்டதில், இருவர் உயிரிழந்தனர்.
நேற்று (09) காலை இடம்பெற்ற இந்த விபத்தின்போது படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து வந்த 44 வயதுடைய சாரதி, பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததோடு, 59 வயதுடைய மோட்டார் சைக்களில் ஓட்டுநர், நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம், சம்பவம் இடம்பெற்ற இடத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்ததாகவும் எனினும் பின்னர், கப் ரக வாகனத்தின் சாரதி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .