2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை;இலங்கை அரசு-ஐரோப்பிய ஆணைக்குழு ஒழுங்கான கலந்துரையாடல் இடம்பெறவில்லை

Super User   / 2010 ஜூலை 02 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஆணைக்குழு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கை அரசுடன் ஒழுங்கான முறையில் கலந்துரையாடவில்லை என  ஐரோப்பிய ஒன்றியத்தின்  இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.

ஐரோப்பிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த தூதுவர், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தொடர்பு முறிவடைதல் ஒரு துரதிஷ்டவசம் என்றார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இவ்வரிச்சலுகையை தற்காலிகமாக நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு 15 நிபந்தனைகளை முன்வைத்தது.

இந்நிபந்தனைகளை, இலங்கை அரசு  நிராகரித்தது. இந்நிராகரிப்பு, உத்தியோகபூர்வமாக பதிலளிக்கும் ஒரு முறையல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X