A.Kanagaraj / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 'டெலிபோன்' சின்னத்தில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்த, முக்கியஸ்தர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்களெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனரென அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமையவே, இந்த இரகசிய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.
அவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர்களில், அமைச்சர்கள் அறுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரும் அடங்குகின்றனரென கட்சியின் தலைமையகமான சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து, ஏற்பட்டிருக்கும் நிலைமை, அரசியல் பின்னணி, கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக, தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தல் உள்ளிட்டவை தொடர்பிலேயே இந்தக் குழுவினர், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
அக்குழுவினர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் பகிரங்கமாக சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
2 hours ago
7 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
27 Jan 2026