2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

தனியார்- அரச பஸ்கள் இணைந்து பயணிக்கவுள்ளன

R.Maheshwary   / 2020 நவம்பர் 30 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளின் எண்ணிக்கை போதுமானதாக இன்மையால், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் என்பன இணைந்து இணக்கமொன்றுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இ.போ.ச பஸ்கள் மற்றும் தனியார் போக்குவரத்து பஸ் சேவைகளை ஒன்றிணைத்து சேவையில் ஈடுபடுத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் இச்சேவை முன்னெடுக்கப்படுமென, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .