Editorial / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேசியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வதா என்பதை உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையிடம் விட்டுவிடுவதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கை இருந்தால் மாத்திரமே நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அன்வார் கூறியுள்ளார்.
ஆனால், தனிப்பட்ட முறையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் தமக்கு இணக்கபாடு இல்லையென்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் மீதான முழு விசாரணையையும் நடத்தும் பொறுப்பு பொலிஸாரிடம் விட்டுவிட வேண்டும்.
போலி நெருக்குதல் அளிக்கக் கூடாது. பொலிஸாரிடம் விசாரணை நடைமுறை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை” என்றார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்ப்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் விவகாரம் குறித்து தற்காப்பு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய வேண்டுமென முன்மொழியப்பட்ட ஆலோசனையை அவர் நிராகரித்துள்ளார்.
-மலேசிய ஊடகங்கள்
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago