2026 ஜனவரி 17, சனிக்கிழமை

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒன்றிணைய அழைப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கிடக்கும் அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னோரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.  

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘நிலமெவகர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில், நேற்று (28) இடம்பெற்றது.  

இதில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

 அங்கு உரையாற்றுகையில்,   
வன்னி மாவட்ட உறுப்பினர் என்ற வகையிலும், அமைச்சர் என்ற வகையிலும் நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அமைச்சர் சுவாமிநாதனிடமும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுமாறு பல தடவை வலியுறுத்தியிருக்கின்றேன்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X