Editorial / 2020 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
( அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரரொருவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தரமுயர்வுக்கான பரீட்சார்த்தப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை இன்று (07) மயக்க நிலை ஏற்பட்டதாகவும் அதனையடுத்து கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் பூனேவ-ஆணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த கடற்படை வீரரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
46 minute ago
4 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
24 Oct 2025