2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

செவ்வந்தியின் தொலைபேசியில் இருப்பது நானா? நாமல்

Freelancer   / 2025 ஒக்டோபர் 24 , பி.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை பரிசோதித்தவர்களே கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இதனை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,

மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். 

அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார். நாமல் எனக் கூறும் போது தமது அரசாங்கத்திலுள்ள நாமலை மறந்து அவர்களுக்கு எனது நினைவு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.

செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும் என்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X