2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

தலதா மாளிகையில் கடும் கட்டுப்பாடு

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகைதரும் யாத்திரர்களின் நலன்கருதியும், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதை கவனத்தில் கொண்டும், தலதா மாளிகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தலதா மாளிகைக்கு வருகைதரும் சகலரும் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களான தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டை எடுத்துவரவேண்டுமென ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் திலங்க தெலே அறிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் அதனை அண்மித்த பகுதியிலிருந்தும் ஸ்ரீ தலதா மாளிகைக்கு சமூகமளிக்கமுடியாது. அவ்வாறு வருகைதந்தாலும் மாளிகையின் வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என, விடுக்கப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு, முன்னெடுக்கப்படும் சகல வழிபாடுகளும் வழமைப்போன்றே முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு யாத்திரர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகைக்குள் நுழையும் சகலரும் முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்திருக்கவேண்டும். உடல் வெப்பநிலை அளவிடப்படும். சுகாதார வழிகாட்டல்களை சகலரும் அவ்வாறே கடைப்பிடிக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, தலதா மாளிகையின் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .