2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

'தாக்குதல்களால் ஆயிரம் மில்லியன் அமெ.டொலர் நட்டம்'

Editorial   / 2019 ஏப்ரல் 27 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு, ஆயிரம் மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாட்டு மக்களிடம் விசேட உரையொன்றை ஆற்றி, பிரதமர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்தும் பயங்கரவாதிகள் இயங்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பிரதமரின் டுவிட்டர் தளத்திலேயே, அவர் இவ்விடயம் தொடர்பான பதிவை இட்டுள்ளார். 

மேலும், தீவிரவாதத் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன்இ இந்தத் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து தனக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சர்வதேசத்தின் உதவியுடன் சேதமடைந்த தேவாலயங்களையும் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதுடன் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான அனைத்து சாதகமான விடயங்களையும் மேற்கொள்வோம் என்றும், பிரதமர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X