J.A. George / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சைகளை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தினத்தில் நடத்த முடியாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (01) உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
எனினும், சுமார் 6 வாரங்களுக்கு முன்னதாக, பரீட்சையை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, தற்போதைய நிலையில், மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு விரைவில் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
58 minute ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
13 Jan 2026