2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

திஸ்ஸ எம்.பி எழுதிய நூல் பிரதமரிடம் கையளிப்பு

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட ´சொல்லப்படாத கதை´ நூல் நேற்று(02) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அந்நூலை பிரதமரிடம் கையளித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் போது சிறையிலிருந்த 55 தினங்களில் எழுதப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்கவின் ´சொல்லப்படாத கதை´ நூலின் ஒரு அத்தியாயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ குறித்தும் எழுதப்பட்டுள்ளது.

சிறையில் இருந்த காலப்பகுதியில் மூன்று முறைகள் திஸ்ஸ அத்தநாயக்கவை காணுவதற்காக சிறைச்சாலைக்கு சென்ற கடந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், தனக்கு நூல் கையளிக்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், நட்பு ரீதியிலான கலந்துரை யாடலிலும் ஈடுபட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .