Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத் திட்டத்தின் D1 வடக்கு கால்வாய்க்கு உரித்தான பழமைவாய்ந்த தீப்பெட்டி பாலத்தின் மீள்நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், நேற்று (07) முற்பகல் ஆரம்பமானது.
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு நீரைக் கொண்டுசெல்லும் பிரதான கால்வாயான வடக்கு கால்வாய்க்கு குறுக்காக அமைந்துள்ள தீப்பெட்டிப் பாலம், விவசாயக் குடியேற்றத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
அண்மையில் இந்தப் பாலம் உடைந்ததன் காரணமாக, பிரதேச விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததுடன், இந்தப் போகத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட 15,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு, நீரை விநியோகிக்க முடியாதுபோனது.
இந்நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், நீர்ப்பாசன அதிகாரிகளால் துரிதகதியில் இப்பாலத்தின் உடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு, நீர் விநியோகம் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதனைப் பார்வையிடச் சென்றிருந்த ஜனாதிபதி, பாலத்தை மீண்டும் புதிதாக நிர்மாணிப்பதற்கு, துரித நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதேச மக்களுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிக்கமைய, இந்தப் பாலம் மீள நிர்மாணிக்கப்படுவதுடன், இதற்கு 250 மில்லியன் ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் முகமாக, நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, அப்பிரதேசத்தை பார்வையிட்டார். நிர்மாணிக்கப்படவுள்ள புதிய பாலத்துக்கான திட்டம் தொடர்பாக, பொலன்னறுவை வலயத்துக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.கே.சேவாகம, ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன் தீப்பெட்டி பாலத்துக்கு சமாந்தரமாக ”எழுச்சிபெறும் பொலன்னறுவை” செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாற்றுப் பாலத்தையும் ஜனாதிபதி, இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, அமைச்சின் செயலாளர் என்.ஏ. சிசிர குமார, நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம் எஸ்.மோகனராஜா, மாவட்டச் செயலாளர் பீ.எஸ்.பீ. அபேவர்தன, நகரபிதா சிதத் சாணக்க ரணசிங்க, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல பண்டார ஜயரத்ன உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago