Gavitha / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று (29) பிரதமர் அலுவலகத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் அடிப்படையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு, குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.
சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள்.
அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
19ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்புப் பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago