2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை, ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்காக நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக,  இலங்கை ஆசிரிய சேவை 3-ii தரத்துக்கு, தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முகமாக, இம் மாதம் 24 ஆம் திகதி மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகப்பரீட்சை, தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகப்பரீட்சைக்கான திகதி பின்னர் அறிக்கப்படுமென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .