2026 ஜனவரி 21, புதன்கிழமை

“நூற்றுக்கு 8 சதவீதம் வரையில் VAT குறையும்”

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவையற்ற வரிகளை நீக்குவதுடன், பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) நூற்றுக்கு 8 சதவீதம் வரையில் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.

வெலிகமவில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், மக்கள் மீதான வரிச்சுமையை நீக்கி, தெளிவான முறையில் மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் வரி அறிவீட்டு முறையை இலகுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரியினை குறைப்பதன் ஊடாகவே, சிறு வியாபாரிகளுக்கு நன்மைகள் ஏற்படுத்தப்படுவதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவாற்கு தேவையான முறைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தன்னிடம் உள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X