2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

பண்டாரகமயை கண்காணித்த ட்ரோன்

R.Maheshwary   / 2020 நவம்பர் 24 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம மற்றும் அட்டுளுகம பிரதேசங்களில் உள்ள மக்கள் இன்றைய தினம் ட்ரோன் கமெராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தின் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீடுகளை விட்டு வெளியேறுவதைக் கண்காணிக்கும் பணியில் இன்று இராணுவத்தின் ட்ரோன் பிரிவு ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அட்டுளுகம கிழக்கு, அட்டுளுகம மேற்கு, கொராவல, கல்கே மண்டிய, ஏப்பிட்டமுல்ல, போகஹவத்த மற்றும் பமுனுமுல்ல 659 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த ட்ரோன் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .