2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

பணிப்புறக்கணிப்புக்கு முஸ்தீபு

Editorial   / 2020 ஜூன் 30 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் காலத்தில் மேல் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதத்துக்கான மாதாந்த பயண அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பஸ் உரிமையாளர்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அடுத்த மாதத்துக்கான மாதாந்த பயண அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பது அநீதியானது என கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .