2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பனை சார்ந்த உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 05 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனம் பொருள் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு அரசு 30 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது எனவும் கைதடியில் உள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கு இந்திய அரசு 85 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது எனவும் பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவர் பசுபதி சிவரத்தினம் தெரிவித்தார்.

நாட்டில் பனைவளம் சார்ந்த உற்பத்திகளை தரமாகவும் நவீனமான முறையில் மேற்கொள்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் அமுலாக்க திட்டமிடப்பட்டுள்ளன
எனவும் கூறினார்.

வடக்கு கிழக்கில் ஏழு மாவட்டங்களில் தற்போது பனை அபிவிருத்தி சபையின் விற்பனை நிலையங்கள் கற்பகம் என்ற பெயரில் இயங்கிவருகின்றது. அவ்வாறான விற்பனை நிலையங்கள் ஏனைய 18 மாவட்டங்களிலும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X