2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோல் விலையை குறைத்தது ஐ.ஓ.சி

Editorial   / 2019 ஒக்டோபர் 11 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் யூரோ 03 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 142 ரூபாய் ஆகும்.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்து.

இம்மாதம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படாது என நிதி அமைச்சு நேற்று (10) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .