2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பாதுகாப்பு அமைச்சு கட்டுப்பாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படை

Super User   / 2010 மே 28 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின்  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் நடவடிக்கைகள் இதுவரை காலமும் பொலிஸ்மா அதிபரின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  இந்த மாதம் 12ஆம் திகதி முதல் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின்  நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு கண்காணித்து வருவதாக அந்த வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

முன்னாள் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் 1983ஆம் ஆண்டு பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக பொலிஸ் விஷேட அதிரடிப்படை பிரிவு  உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X