2026 மார்ச் 04, புதன்கிழமை

பாஸ்கரலிங்கத்தை இலக்குவைக்கிறது எதிரணி

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமரின் அமைச்சான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஆலோசகரான ஆர். பாஸ்கரலிங்கம் மீது, நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்க, சிறைக்கு அனுப்பப்பட்ட பின்னணியிலேயே, இந்த நடவடிக்கை குறித்து, ஒன்றிணைந்த எதிரணி ஆராய்கிறது.

நிதியமைச்சின் செயலாளராக முன்னர் இருந்த பாஸ்கரலிங்கம், 1989இலும் 1990இலும், "அவசர, இரகசிய செலவுகள்" எனக் குறிப்பிட்டு, மில்லியன்கணக்கான பணத்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் செல்ல அனுமதித்தார் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டினார்.

"இந்தப் பணம் ஒதுக்கப்பட்டமை தான், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டமைக்கு, இந்தப் பணம் ஒதுக்கப்பட்டமை தான் பிரதான காரணமாக அமைந்தது.

ஆனால் அப்போது, பாஸ்கரலிங்கம் தான் இப்பணத்தை அனுமதித்தார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.

பதினாறு நாட்களில், பாஸ்கரலிங்கத்தால் அனுமதிக்கப்பட்ட வவுச்சர்கள், காசோலைகள் என, 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆவணங்களை, ஒன்றிணைந்த எதிரணி கொண்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், முடிவெடுப்பதில் முன்னைய அரசாங்கத்துக்கு உதவிய வீரதுங்க, தற்போது சிறையில் காணப்படும் போது, பாஸ்கரலிங்கம், அமைச்சொன்றின் ஆலோசகராக நியமிக்கப்பட்டமை, நியாயமற்றது என்று குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்தில் சந்திக்கும் போது, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கவனத்துக்கு, இவ்விடயத்தைக் கொண்டுவர இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .