Editorial / 2017 செப்டெம்பர் 02 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்பு உருவாக்குவதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டும் என்றும் இழுத்தடிக்கப்படலாகாது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, நேற்று (01) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த விடயம் சம்பந்தமாக, ஏற்கெனவே, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், மேலும் காலதாமதம் ஏற்படாத வகையில், அரசமைப்பின் வரைவானது, இந்த வருட இறுதிக்குள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து, உடனடியாக, அது சர்வஜன வாக்கெடுப்புக்கு, உட்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இலங்கை அரசாங்கமானது, இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில், இந்தக் கருமத்தை நிறைவேற்றுவதை, இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
இந்திய அரசாங்கத்தினது ஒத்துழைப்பை, மீள் உறுதி செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த நடவடிக்கைகளை நிறைவுக்குக் கொண்டுவரும் முகமாக, தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக கூறினார்.

18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago