Kamal / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டில், மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியது என, அக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமிழ்மிரருக்கு இன்று (03) தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் இன்று இடம்பெற்றது. கூட்டமைப்புச் சார்பாக, அதன் தலைவர் இரா. சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டனர்.
இதன்போது, 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை, இரண்டு தலைவர்களும் (ஜனாதிபதியும் பிரதமரும்) மதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை, கூட்டமைப்பு முன்வைத்ததாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி, அதன்போது வழங்கப்பட்ட வலுவான சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவது குறித்தே, குறியாக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.
58 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
58 minute ago
1 hours ago