2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

Freelancer   / 2026 மார்ச் 01 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மக்கள் தங்களைக் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார் என  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
பெஞ்சமின் நெதன்யாகு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், ஈரான் மக்கள் சுதந்திரம் பெறுவதற்கு உதவும் என அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இது ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் மக்கள் அனைவரும் பெருமளவில் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் எனவும், இந்த வரலாற்றுப் பணியினை ஒன்றிணைந்து செய்து முடிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானின் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தீவிரத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், நெதன்யாகுவின் இந்த உரை சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .