Freelancer / 2026 மார்ச் 01 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்திய ஈரான், கட்டார் நாட்டில் பல இடங்களில் ஏவுகணைகளை வீசியுள்ளது.
இந்த ஏவுகணை துண்டுகள் விழுந்ததால் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் ஏவிய ஏவுகணைகள் கட்டாரின் வான்வழி பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்ட பின்னர் இவ்வனர்த்தம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கட்டாரை நோக்கி மொத்தம் 66 ஏவுகணைகள் ஏவப்பட்டன.
நாடு முழுவதும் ஏவுகணை துண்டுகள் விழுந்ததாக 114 முறைப்பாடுகள் கிடைத்தன.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை மிக கவலைக்கிடமாக உள்ளது.
இந்த தாக்குதலால் நாட்டின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் உள்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு,
பொதுமக்கள் இராணுவ தளங்களின் அருகே செல்லாமல், வீட்டிற்குள் தங்குமாறு கேட்டுக்கொண்டது. மேலும், அடையாளம் தெரியாத எந்தவொரு பொருளையும் தொடவோ அணுகவோ கூடாது என்றும், அவற்றை கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தருமாறும் அறிவுறுத்தியது.
இலங்கையர்கள் அதிகளவில் வாழும் நாடுகளில் கட்டாரும் ஒன்று. எனவே இந்த தாக்குததில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. R
20 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
2 hours ago