2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தில்  கொரோனா ​தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் மட்டக்குளி பிர​தேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு துறைமுகத்தில்  18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

18 தொற்றாளர்களுள் 9 பேர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ராகம, மத்துகம, வென்னப்புவ, காலி, நீர்கொழும்பு,மாத்தறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்,  புளுமென்டல் பிரதேச விடுதியொன்றில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பிலிருந்த 20 பேர் யாழ்ப்பாணத்துக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .