Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
A.K.M. Ramzy / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மேல்மாகாணத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு ள்ளதாகத் தெரிவித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இம்முறை தொற்று மிகவும் வேகமாக பரவிவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சவேந்திர சில்வா; இவற்றை ஆராய்வதற்காக விசேட பரிசோதனைகளை, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் செய்துவருவதாகவும் கந்தகாடு, பேலியகொட, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மாதிரிகளை கொண்டு அறிக்கை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், மேல்மாகாணத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பதைத் தொடர்ந்தே மேல்மாகாணத்துக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025