Editorial / 2018 ஜூன் 27 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா நிதி உதவிகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளிடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வதற்கான நெருக்கடி நிலைமைகளுக்கு இலங்கையை சிக்கவைத்து, சீனா எவ்வாறு அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றியது என்பதை விவரிக்கும் ‘நிவ்யோர் டைம்ஸ்’ பத்திரிகையின் கட்டுரை ஒன்றிலேயே மேற்படி தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு, கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் செலவுகளுக்காக பாரிய நிதி தொகை ஒன்றை சீனா வழங்கியுள்ளதாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சுமார் 7.6 மில்லியன் டொலர் நிதி, சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின், ஸ்டேன்டர்ட் சார்ட்டட் வங்கி கணக்கின் ஊடாக பணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு 10 நாட்கள் முன்பு, 3.7 மில்லியன் டொலருக்கு காசோலை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, அலரி மாளிகைக்கு 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு காசோலைகள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலான கொடுப்பனவுகள், சீனாவின் துறைமுக பொறியியல் கட்டுமான நிறுவனத்தின் துணை கணக்குகளின் மூலமே வழங்கப்பட்டன.” என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
34 minute ago
44 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
44 minute ago
58 minute ago
1 hours ago