2020 ஜூலை 15, புதன்கிழமை

மஹிந்தவும் மீளப்பெற்றார்

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் பதவி வகிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராகப, மஹிந்த தரப்பினர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு, நேற்றைய தினம் (14) மீளப் பெறப்பட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த யாதுரிமைப் பேராணை மனு, செவ்வாயன்று (12) வாபஸ் பெறப்பட்டிருந்த நிலையிலேயே, மஹிந்த தரப்பினரும், தமது தரப்பால் தாக்கல் செய்திருந்த மனுவை, நேற்று, வாபஸ் பெற்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோர். தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், ​டிசெம்பர் 3ஆம் திகதியன்று, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இது விவகாரத்தில், நீதிப் பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த 122 உறுப்பினர்கள், தங்களது கையொப்பங்களுடன், மேற்படி யாதுரிமைப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X